தேவையானவை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெள்ளரிக்காய், கேரட், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு கழுவி, சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றுடன் மிளகுத்தூள், சாட் மசாலா, சர்க்கரை உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment