தேவையானவை: கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து... புளி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும். மழைக்காலத்தில் காய் வாங்க முடியாமல் போகும்போது, இந்தக் குழம்பு மிகவும் உதவும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment