Tuesday, July 23, 2013

பட்டர்பீன்ஸ் பொரியல்

பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால் கிலோ, வெங்காயம் - ஒன்று, முந்திரி - 5, கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி குக்கரில் போட்டு, தேவையான  தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது  இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது... சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.

No comments:

Post a Comment