தேவையானவை: நீளமான பாகற்காய் - 250 கிராம், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன் பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயை வில்லை வடிவமாக நறுக்கி விதையை எடுக்கவும். புளியைக் கரைத்து பாகற்காயில் விட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, தண்ணீர் வடிக்கவும். வேக வைத்த பாகற்காயுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசிறிய காயை வறுக்கவும். வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு பாகற்காய் மிகவும் நல்லது. பாகற்காயில் ஜூஸ் தயாரித்தும் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை பாகற்காயை சமையலில் சேர்ப்பது, உடலுக்கு நன்மை தரும்.
குறிப்பு: சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு பாகற்காய் மிகவும் நல்லது. பாகற்காயில் ஜூஸ் தயாரித்தும் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை பாகற்காயை சமையலில் சேர்ப்பது, உடலுக்கு நன்மை தரும்.
No comments:
Post a Comment