தேவையானவை: வறுத்த சேமியா - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், அரிசி மாவு - இரண்டு ஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவுடன் வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போல கிள்ளிப் போட்டு பொரிக்கவும்.
குறிப்பு: ரவை அல்லது ராகியிலும் இதே முறையில் பக்கோடா தயாரிக்கலாம்.
குறிப்பு: ரவை அல்லது ராகியிலும் இதே முறையில் பக்கோடா தயாரிக்கலாம்.
No comments:
Post a Comment