தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கடுகு, கடலைப்பருப்பு பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணைக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்து, மசித்து, புளிக் கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு தாளித்து, இதனுடன் பெருங்காயத்தூளும் சேர்க்கவும். நிறைவாக, வெல்லத்தை பொடித்துப் போட்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு, கலந்து இறக்கவும்.
குறிப்பு: மூல நோய் உள்ளவர்களுக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது.
குறிப்பு: மூல நோய் உள்ளவர்களுக்கு கருணைக்கிழங்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment