Friday, August 23, 2013

பாலக்-குடமிளகாய் தால்

தேவையானவை:
 பருப்பு - 2 கப் (எந்த பருப்பு வேண்டுமானாலும்),
பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்,
 பச்சை மிளகாய் - 3,
 கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன்,
 கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு தேவையான அளவு,
 மாங்காய் துண்டு (பெரியது) - 1,
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
 செய்முறை:
 பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பருப்புகளையும், மாங்காயையும் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்). கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் வெடித்ததும், குடமிளகாய் போட்டு வதக்கி, 2 நிமிடம் கழித்து கரம் மசாலாதூள் போட்டு கிளறவும். வெந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும். குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை சேர்க்கலாம். பருப்புகளுக்கு பதிலாக முளைகட்டிய பயறும் சேர்க்கலாம். கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்தும் இந்த தால் செய்யலாம்.

No comments:

Post a Comment