Thursday, August 22, 2013

ராஜ்மா மசாலா

தேவையான பொருட்கள்


சிகப்பு கிட்னி பீன்ஸ்(ராஜ்மா பீன்ஸ் ) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 3
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 /2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
அரைக்க

பூண்டு - 4 பல்
இஞ்சி – ஒரு துண்டு
தாளிக்க

சீரகம் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 1 ” துண்டு
பிரியாணி இலை – 1
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை

ராஜ்மா பயிரை 7 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பயிரை 5 – 6 விசில்கள் வரை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை சுடு நீரில் ஊற வைத்து தோலுரித்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
கடைசியாக வேக வைத்து வைத்துள்ள ராஜ்மா, தேவையான அளவு தண்ணீர், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாதூள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வேக வைக்கவும்.
ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment