Sunday, August 11, 2013

நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்


தேவையானவை: நூடுல்ஸ் (வேக வைத்தது) - கால் கப், பிரெட் - 10 துண்டுகள், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறு துண்டு (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கேரட் துருவல், குடமிளகாய் துண்டுகள் - தலா டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்
ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்க்கவும். உருகியதும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தக்காளி சாஸ் விட்டு கலக்கவும். ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு கலவையை பரவலாக வைத்து, சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.
குறிப்பு: இதை 5 நிமிடத்தில் செய்துவிடலாம்... சத்து நிறைந்தது

No comments:

Post a Comment