ரவை - 200 கிராம்,
கேசரி பவுடர் - சிறிதளவு,
சர்க்கரை - 200 கிராம்,
எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை:
ரவையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து, கேசரி பவுடர் சேர்த்து மேலும் பிசைந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறிய அப்பள வடிவில் இடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அப்பள வடிவில் இட்டு வைத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஜீரா காய்ந்ததும் (கம்பிப் பதம்), பொரித்து வைத்ததை இருபுறமும் பாகால் நனையும்படி போட்டு எடுத்து தனியே வைக்கவும். ஜீரா மேலே பூத்து வந்ததும் அப்படியே சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். பாலை நன்கு காய்ச்சி போளியின் மேல் விட்டு, ஊறியதும் சாப்பிட்டால்... சுவையாக இருக்கும். மேலே குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் தூவலாம்.
No comments:
Post a Comment