Sunday, August 11, 2013

ரவா - சேமியா மினி இட்லி


தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - அரை கப், புளிப்புத் தயிர் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை வறுக்கவும். அதனுடன் ரவை, சேமியாவை சேர்த்து வறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை புளிப்புத் தயிரில் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடம் ஊற விடவும். மினி இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள கலவையை விட்டு, சிறு இட்லிகளாக ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு எல்லாவித சட்னிகளும் தொட்டு சாப்பிடலாம்

No comments:

Post a Comment