தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப்,
வெல்லம் - அரை கப்,
பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் - ஒரு பெரிய துண்டு,
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்கு - ஒரு சிறிய துண்டு.
செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாசம் வரும்வரை வறுக்கவும். சுக்கைத் தூளாக்கிக் கொள்ளவும். எள்ளை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி விட்டு இளம்பாகு வைக்கவும். இதில் ஒட்ஸ் மாவைப் போட்டுக் கிளறவும். பிறகு இதனுடன் தேங்காய், எள், பயத்தம் பருப்பு, சுக்குத்தூள் போன்றவற்றைப் போட்டு கிளறி, இறக்கி, பொறுக்கக்கூடிய சூட்டில் உள்ளங்கையில் வைத்து சிறிது சிறிதாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment