Saturday, August 17, 2013

கைமுறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய், சீரகம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை விரல் களால் சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து, முறுக்கு சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை கவனமாகப் போட்டு, எண்ணெய் ஓசை அடங்கி வரும்போது எடுக்கவும். சீரகத்துக்குப் பதில் எள்ளும் போடலாம்

No comments:

Post a Comment