Sunday, August 11, 2013

சில்லி கார்லிக் நூடுல்ஸ்


தேவையானவை: நூடுல்ஸ் (வெந்தது) - அரை கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், துருவிய கேரட் - அரை கப், இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயம், கேரட், இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும். நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு: இந்த அவசரயுகத்தில் இதை காலை நேர டிபனாக 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்

No comments:

Post a Comment