Friday, August 23, 2013

ரிப்பன் முறுக்கு

 தேவையானவை
 புழுங்கலரிசி - 3 டம்ளர்.

 பொட்டுக்கடலை - 1 டம்ளர்.
 தேங்காய் - 1 மூடி
 பச்சை மிளகாய் - 6
 பெருங்காயம் - சிறு துண்டு
 எள் - 1 டீஸ்பூன்
 உப்பு - 3 டீஸ்பூன்
 டால்டா - 4 டீஸ்பூன்
 சூரியகாந்தி எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை
 அரிசியை நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக கெட்டியாக வதக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் தூள் செய்து கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், பெருங்காயம் உப்பு இவைகளை அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி மாவுடன் பொட்டுக் கடலைத்தூள், அரைத்த தேங்காய்க் கலவை, எள், டால்டா, எல்லாவற்றையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்கு குழாயின் ரிப்பன் அச்சில் மாவை இட்டு எண்ணையில் ஒரு சுற்று பிழிந்து விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு முறுக்குபோல சத்தம் அடங்கியதும் எடுக்கவும். குறிப்பு வழக்கமான முறுக்கு செய்வதை விட இந்தப் பொட்டுக்கடலை முறுக்கு, வித்தியாசமான சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்திருந்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment