ரவை - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 200 மில்லி.
செய்முறை :
ரவையை பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவில் விட்டு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.
No comments:
Post a Comment