தேவையானவை:
மைதா மாவு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம்,
கேசரி பவுடர் - சிறிதளவு, சாக்லேட் பார் - 4 (அல்லது பூஸ்ட் அல்லது போர்ன்விடா பவுடர் - 4 டீஸ்பூன்),
நெய் - 100 மில்லி.
செய்முறை:
மைதா மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை தண்ணீர் விட்டு கம்பிப்பதம் வரும் வரை பாகு காய்ச் சவும். மைதா மாவை மூன்று பங்காக பிரிக்கவும். சர்க்கரை பாகையும் மூன்று பங்காக பிரித்து... ஒரு பங்கு மைதாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகை சேர்த்துக் கலக்கி, சாக்லேட்டை கரைத்து விட்டு கிளறி, கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மீண்டும் ஒரு பங்கு மாவுடன் ஒரு பங்கு சர்க்கரை பாகு, கேசரி பவுடர் சேர்த்துக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகுந்த ஒரு பகுதி மாவுடன் மீதி சர்க்கரை பாகு சேர்த்துக் கிளறி (கலர் சேர்க்க வேண்டாம்) கெட்டியானதும் தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். ஆரஞ்சு, பிரவுன், வெள்ளை என்று மூன்று கலரில் பார்க்க அழகாக இருக்கும்.
No comments:
Post a Comment