தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - கால் கப்.
செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு நன்கு கரையவிடவும். கொதித்ததும் கேழ்வரகு மாவைத் தூவி கிளறவும். இறுகி வரும்போது தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து கிளறி எடுக்கவும். முந்திரிகளைத் துண்டுகளாக்கி சேர்த்துக் கலக்கவும். வாழை இலையில் நெய் தடவி மாவு கலவையில் கொஞ்சம் எடுத்து, உருட்டி தட்டவும். சூடான தவாவில் நெய் தடவி, தட்டி வைத்த அடையை போடவும். பிறகு திருப்பிப் போடவும். சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: இதை இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். அவசரத்துக்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment