தேவையானவை:
நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்,
கடலை மாவு - அரை கப்,
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
செய்முறை:
வெங்காயத்துடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைத் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த கலவையை நன்றாக கைகளால் உதிர்த்துப் போட்டு உதிரியான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment