Saturday, August 17, 2013

கடலை உருண்டை


தேவையானவை:
   வறுத்த வேர்க்கடலை - 250 கிராம், பாகு வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
   வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, சுத்தம் செய்யவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி கெட்டியாகப் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அகலமான பேஸினில் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

No comments:

Post a Comment