Thursday, August 22, 2013

தர்பூஸ் மசாலா ஜூஸ்

தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் - அரை அளவு
இஞ்சி - 25 கிராம்
புதினா - கைப்பிடி அளவு
எலுமிச்சம்பழம் - பாதி
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 100 கிராம்
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
* முதலில் இஞ்சி, புதினாவை நன்கு கழுவி மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* தர்பூசணியின் விதை நீக்குவது கடினம் என்பதால், அப்படியே மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு வடிகட்டினால் விதையின் திப்பிகள் அடியில் தங்கி விடும். அரைத்து வைத்த இஞ்சியையும், புதினாவையும் தர்பூசணி ஜூஸோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
* அதோடு மிளகுத்தூள், பெருங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து ஒரு க்ளாஸ் குடித்துப் பாருங்கள் இதன் ஆரோக்கிய சுவை தெரியும்.


No comments:

Post a Comment