Friday, August 16, 2013

பார்லி கட்லட்




தேவையான பொருட்கள் :
வேகவைத்த பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி கொள்ள :
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி,புதினா - சிறிதளவு
கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
செய்முறை :
வெங்காயம் + பச்சை மிளகாய் +புதினா, கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும். ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
வேகவைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின், வெங்காயம் + பச்சை மிளகாய் + கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கொத்தமல்லி,புதினா தூவி , சிறிது நேரம் ஆறவிடவும்.
அரைத்த பார்லி + வறுத்த ஒட்ஸ் + வதக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.)
இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கட்லடுகள் செய்யவும்.
தோசை கல்லினை காயவைத்து, சிறிய சிறிய கட்லட்(விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.) தட்டி தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான சத்தான பார்லி ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கவனிக்க :
இதில் வெஜிடேபுள்ஸ் சேர்த்து கட்லட் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
அவரவர் விருப்பதற்கு எற்றாற் போல மசாலாவினை சேர்த்து கொள்ளலாம்.
ஒட்ஸுனை விரும்பினால் ஒன்றும் பாதியுமாக பொடித்தும் சேர்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment