Saturday, August 17, 2013

சம் சம்


தேவையான பொருட்கள் பனீர் 1 கப்
சர்க்கரை 5 கப்
தண்ணீர் 3 கப்
ஆரஞ்ச் புட் கலர் கால் தேக்கரண்டி
கொப்பரைத் துருவல் அரை கப்
மைதா மாவு 2 தேக்கரண்டி
செய்முறை:
 பனீரில் புட் கலர், மைதா மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து, உள்ளங்கையில் வைத்து, சிறிய உருளை டிவத்தில் உருட்டவும். தட்டில் மாவு தூவி, இந்த உருளைகளை வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி, தளதளவென்று கொதிக்க விடவும். அதில், "சம் சம்' உருளைகளை தட்டிலிருந்து கவிழ்த்துக் கொட்டவும். அதிக தீயில், 15 நிமிடம் பாகு நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பிறகு, இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றி, 3 மணி நேரம் ஆற விடவும். பிறகு ஊறிய, சம் சம்களை எடுத்து, அதன் மேல் கரண்டி யால் அழுத்தி, அதிகப்படியான சர்க்கரைப் பாகை வெளியே எடுத்து விடவும். கொப்பரை துருவலில் புரட்டி, "ஜில்'லென்று பரிமாறவும்.

No comments:

Post a Comment