Tuesday, August 27, 2013

ஓட்ஸ் கார உண்டை

 தேவையானவை:
 ஓட்ஸ் - ஒரு கப்,
 காய்ந்த மிளகாய் - 4, 
தேங்காய் - ஒரு துண்டு,
 கறிவேப்பிலை - சிறிது, 
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
 சீரகம் - அரை டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: 
ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி, தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஓட்ஸில் உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் போட்டு, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

No comments:

Post a Comment