தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை - ஓன்றரை கப்,
பாதாம், முந்திரிப்பருப்பு - தலா 10,
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏதேனும் ஒரு எசென்ஸ் - ஒரு சொட்டு,
கிஸ்மிஸ் பழம் 10.
செய்முறை:
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு தலா 5 எடுத்து தோல் உரித்து பாலில் ஊற வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் மையாக அரைக்கவும். மீதம் உள்ள பாதாம், முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக வெட்டி, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலுடன் ஓட்ஸைக் கலந்து நன்கு குழைய வேக வைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரையைக் கொட்டி கிளறவும். ஓரளவு கெட்டியான பதத்தில் வந்ததும் இறக்கி வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்மிஸ் பழம், எசென்ஸ் கலந்து ஃபிரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment