Saturday, August 17, 2013

எள் தட்டை


தேவையானவை:
 அரிசி மாவு - 250 கிராம், எள் - 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவுடன் வறுத்த அரைத்த உளுத்தம் மாவு, எள், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டை வடிவில் தட்டி, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் தட்டைகளைப் போட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கறிவேப்பிலை, கொத்தமல்லிக்குப் பதிலாக புதினாவை பொடியாக நறுக்கிப் போட்டும் தட்டை செய்யலாம். எள்ளுக்குப் பதிலாக ஓமம், பொட்டுக்கடலை, உடைத்த வேர்க்கடலை சேர்த்தும் தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment