Friday, August 23, 2013

நெய் பருப்பு மசியல்

 தேவையானவை:
 துவரம்பருப்பு - ஒரு கப்,
 பாசிப்பருப்பு - கால் கப்,
 தக்காளி - 2,
 பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
 உப்பு - ருசிக்கேற்ப,
 மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
 சாம்பார்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
 சீரகம் - ஒரு டீஸ்பூன்,
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.
 செய்முறை:
 தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 2 பருப்புகளையும் குக்கரில் குழைய வேகவிடவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் தக்காளி துண்டுகள், மிளகாய்தூள், பெருங்காயம், சாம்பார்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். 2 நிமிடத்துக்குப் பிறகு உப்பு போடவும். கடைசியில் வெந்த பருப்பைப் போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். இந்த ‘தாலை’ விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம்.

No comments:

Post a Comment