Tuesday, August 13, 2013

முள்ள‌ங்கி ரொ‌ட்டி


தேவையானப் பொருட்கள்: கோதுமை மாவு 2 கப்
முள்ளங்கி 1/4 கிலோ 
கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் அல்லது நெய் 
கொத்துமல்லி சிறிதளவு 
செய்முறை: முள்ளங்கியைத் தோல் சீவிக் கொள்ளவும். 

ஒரு அகன்ற பாத்திரத்தில் முள்ளங்கியைத் துருவிக்கொண்டு அதில் உப்பு, மிளகாய்த்தூள், மசாலாத்தூள், பொடியாக அரிந்த கொத்துமல்லி ஆகியவற்றைத் தூவவும். 

அதில் சிறிது சிறிதாக கோதுமை மாவைச் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசையவும். 

பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற விடவும். 

பிறகு மாவை உருண்டையாக உருட்டிக் கொண்டு சப்பாத்திகளாக உருட்டவும். 

சூடான தோசைக் கல்லில் போட்டு இரண்டு பக்கமும் லேசாக வாட்டி எடுக்கவும். 

பிறகு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறப் புள்ளிகள் தோன்றும் வரை வாட்டி எடுக்கவும். 

இது ஆரோக்கியமான ருசியான ரொ‌ட்டி. முள்ளங்கி சேர்த்திருப்பதால் சப்ஜி தேவைப்படாது. 

தயிர் அல்லது பச்சடியில் தொட்டு உண்டால் மேலும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment