Sunday, August 11, 2013

இட்லி வெஜ் உசிலி


தேவையானவை: இட்லி (உதிர்த்தது) - 3, வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும். பிறகு வெங்காய துண்டுகள், கேரட், குடமிளகாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து, காய்கள் நன்கு வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள இட்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கிளறி எடுக்கவும்.

No comments:

Post a Comment