Saturday, August 17, 2013

கர்ச்சிக்காய்


தேவையானவை:
 ஈர அரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி அரைத்த மாவு) - 200 கிராம், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொட்டுக்கடலை - ஒரு கப், எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை: 
 தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், வெல்லம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை சொப்பு போல் செய்து, பொடித்து வைத்திருக்கும் பொடியுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி, உள்ளே வைத்து மூடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சொப்புபோல செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: இது பாட்டி காலம் முதல் செய்யப்பட்டு வரும் பழைமையான ஸ்வீட்.

No comments:

Post a Comment