Monday, August 12, 2013

முருங்கைக்காய் கூட்டு

முருங்கைக்காய் கூட்டு,தேவையானவை: 

சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப், 
கடலைப்பருப்பு - கால் கப், 
பாசிப்பருப்பு - கால் கப், 
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், 
பச்சை மிளகாய் - 2, 
காய்ந்த மிளகாய் - 2, 
சீரகம் - கால் டீஸ்பூன், 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். 

தாளிக்க: 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
கடுகு - கால் டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும். கடைசியாக வெந்த பருப்புகளை அதில் கொட்டி, தாளித்து இறக்கவும்.


No comments:

Post a Comment