ஈர அரிசி மாவு (பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, துணியில் போட்டு உலர்த்தி, அரைத்து, சலித்த மாவு) - 300 கிராம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிற கேசரி பவுடர் - சிறிதளவு, வெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று பாகமாக பிரிக்கவும். பிறகு ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கலர் பவுடரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து தனித் தனியாக வைக்கவும். மாவை சிறிய இழைகளாக முறுக்கி, வட்டமாக முறுக்கு வடிவில் சுற்றி, ஈரத்தை உறிஞ்சும் துணியில் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு:
மூன்று கலர்களில், பார்வைக்கு அழகாகவும், சுவையில் அசத்தலாகவும் இருக்கும் இந்த முறுக்கு.
No comments:
Post a Comment