Saturday, August 17, 2013

மனோகர லட்டு


தேவையானவை: 
 அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெல்லம் - 300 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: 
 அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு பிழியும் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). முறுக்கை வாய் அகலமான பேஸினில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: முறுக்கில் உப்பு சேர்க்கக் கூடாது. இந்த லட்டு, முறுக்கின் கரகரப்பும் வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும்.

No comments:

Post a Comment