Sunday, August 18, 2013

மணத்தக்காளி பொன்னாங்கன்னி பச்சடி

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி
பொன்னாங்கன்னி கீரை - ஒரு கைப்பிடி
காய்ந்த சுண்டைக்காய் - ஒன்று
மிதுக்க வற்றல் - ஒன்று
மோர் மிளகாய்  - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
நீர் மோர் - அரை டம்பளர்


செய்முறை:

* ஒரு கடையில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு மணத்தக்காளி கீரை மற்றும் பொன்னாங்கன்னி கீரையை இரண்டு நிமிடம் வதக்கி தேவையான அளவு நீர் விட்டு வேக வைக்கவும்.

* ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டுலேசாக வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* இரண்டும் லேசா வதங்கியதும் பெருங்காயம் சேர்த்து சுண்டைக்காய் மற்றும் மிதுக்க வற்றல் ,மோர் மிளகாய்  சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

* பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

* கீரை வெந்ததும் அதை மிக்சியில் கெட்டியான  விழுதாக அரைத்தெடுக்கவும்.

* கீரை கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும்.

* நீர் மோரில் உப்பு சேர்த்து அதையும் கீரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

* சுவையான சத்தான பச்சடி   தயார்.

குறிப்பு:

மிதுக்க வற்றல்,சுண்டைக்காய் வற்றல் பிடிக்காதவர்கள் அது இல்லாமல் செய்யலாம்.ஆனால் இரண்டும் சேர்த்தால்தான் சுவை அதிகம் இருக்கும்.நல்லெண்ணையில் வறுப்பதால் கண்டிப்பாக கசப்பு இருக்காது..

நீர் மோர் பிடிக்காதவர்கள் தயிர் சேர்த்தும் செய்யலாம்.

உங்களின் காரத்திற்கு தகுந்தாற்போல் மிளகாய் சேர்க்கவும்.

No comments:

Post a Comment