Tuesday, August 13, 2013

புளி மீன்

தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 100 மில்லி
புளிக்கரைசல் - 1/2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவி விழுதாக்கவும்)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை* மீனைச் சுத்தம் செய்து தலை, வால் ஆகியவற்றை நறுக்கவும். உப்பு போட்டு திருப்பவும், சுத்தம் செய்யவும்.

* ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டிய பூண்டைச் சேர்க்கவும்.

* தேங்காய் விழுதைச் சேர்த்து புளிக்கரைசலையும் சேர்க்கவும்.

* கெட்டியான கிரேவியாக வரும் வரை சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.

* மீனைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

* சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்த செய்முறை சுவையானதாக இருக்கும்.

No comments:

Post a Comment