தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ்--1கப்
கேரட், பீன்ஸ், -1கப்
இஞ்சி, பூண்டு
பச்சைப் பட்டாணி-1கப்
மைதா-1/2கப்
உருளைக் கிழங்கு-ஒன்று
பிரட் தூள் -1/2கப்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment