Saturday, August 17, 2013

மல்டி பருப்பு மிக்ஸர்


தேவையானவை:
 முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு பயறாக பொரித்து எடுக்கவும். பொரித்த பயறுகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி, கறிவேப்பிலை பொரித்துப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: மழைக்காலத்தில் இந்த மல்டி பருப்பு மிக்ஸரை தயாரித்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment