Saturday, August 17, 2013

மசாலா கடலை


தேவையானவை: 
 அரிசி மாவு - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 அரிசி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்துக் கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வேர்க்கடலையை மாவில் தோய்த்துப் போட்டு பொரிக்கவும்.
குறிப்பு: கொண்டைக்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தியும் தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment