Saturday, August 17, 2013

மாலாடு


தேவையானவை:
  பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை:
  பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். சர்க்கரையையும் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யை சூடாக்கி மாவில் விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை போட்டு கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

No comments:

Post a Comment