Thursday, August 22, 2013

காரட் பயத்தம் பருப்பு சாலட்

தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பயத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மாங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

* பயத்தம் பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

* காரட்டைக் கழுவி, தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

* கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.(விதையை நீக்கி விட்டால், காரம் குறைந்த்து விடும். மிளகாயையும் கூட சாப்பிடலாம்).

* ஒரு பாத்திரத்தில் காரட் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, மாங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு போட்டுக் கலக்கவும்.

* தாளிக்கும் கரண்டியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, காரட் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக ஊற வைத்துள்ள பருப்பை, தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, காரட்டுடன் சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


No comments:

Post a Comment