தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், புளிப்புத் தயிர் - முக்கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரில் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூளை கலக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஃப்ரூட் சால்ட் போட்டு கெட்டியாகக் கலக்கவும். கலவையை எண்ணெய் தடவிய தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டால்... டோக்ளா ரெடி!
கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு கலக்கவும். டோக்ளா துண்டுகளை சேர்த்து லேசாக கிளறவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் போட்டு கலந்து எடுத்து வைத்தால்... டோக்ளா தயார்.
குறிப்பு: சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். புரோட்டீன், கால்ஷியம் நிரம்பியது
No comments:
Post a Comment