Friday, August 23, 2013

இட்லி மஞ்சூரியன்

தேவையானவை
 இட்லி - 6
 இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - 2
 வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
 சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
 அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
 மிளகாய்த்தூள் - 1/2 சிட்டிகை
கறி மசாலா - 1/2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் + நெய் - தேவையான அளவு

 செய்முறை
 இட்லியை துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவிட்டு அதில் பொரித்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி வதக்கவும். வதங்கியதும் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி, பச்சைக் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கி வைக்கவும். சூடான இட்லி மஞ்சூரியன் ரெடி. குறிப்பு அஜினோமோட்டோ குழந்தைகளுக்கு அதிகம் ஒத்துக்கொள்ளாது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment