Saturday, August 17, 2013

பாதாம் முந்திரி கேக்


தேவையானவை: 
 பாதாம் பருப்பு - 15, முந்திரிப் பருப்பு - 20, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை: 
 பாதாம், முந்திரியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்பு, முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

No comments:

Post a Comment