பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலை - தலா 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
பார்லி, ஜவ்வரிசி, அவல், பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து சலிக்கவும். சர்க்கரைப் பொடியுடன் மாவைக் கலந்து, நெய்யை லேசாக சூடுபடுத்தி சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுக் கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: இந்த உருண்டை ஒன்றை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும்... உடம்பு புத்துணர்ச்சி பெறும்.
No comments:
Post a Comment