Monday, August 12, 2013

கத்தரிக்காய் மசாலா


கத்தரிக்காய் மசாலா,தேவையான பொருள்கள்:கத்தரிக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
பட்டை,சோம்பு,இலவங்கஇலை - தேவையதன அளவு
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்

செய்முறை: 
கத்தரிக்காயை நான்காக நறுக்கி தண்ணீரில் போடவும்.வெங்காயம்,தக்காளியை நறுக்கவும்.கடாயில் எண்ணெய்ஊற்றி பட்டை,சோம்பு,இலவங்கஇலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து கிளரவும்.

பின்பு மிளகாய்தூள் ,மல்லி தூள் ,மஞ்சள்தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி கத்தரிக்காயும் வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தண்ணீர்சுண்டியதும் இறக்கவும்.

No comments:

Post a Comment