Friday, August 23, 2013

மீன் குழம்பு

 தேவையான பொருட்கள்
 மீன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
 நாட்டுத் தக்காளி - 200 கிராம்
 புளி - எலுமிச்சம் பழ அளவு
 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
 உப்பு,- தேவைக்கேற்ப
எண்ணை - தேவைக்கேற்ப
 அரைக்க
 மிளகு - 2 டீஸ்பூன்
 சீரகம் - 1 டீஸ்பூன்
 தேங்காய் துருவல் - 1/2 மூடி
 இஞ்சி - சிறு துண்டு
  தாளிக்க
 கடுகு,
காய்ந்த மிளகாய்,
 கறிவேப்பிலை
 செய்முறை
 * மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மீனைப்போட்டு வறுத்தெடுக்கவும்.
 * அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை விழுதாக்கி கொள்ளவும்.
 * புளியைக் கரைத்துக் கொண்டு அந்த நீரிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் தேவைக்கேற்ப உப்பு, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்க்கவும்
. * எண்ணெயைக் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும், வெங்காயம், தக்காளியை வதக்கி கரைத்து வைத்த புளிநீரைக் கொதிக்க வைக்கவும். கொதி வெந்தவுடன் மீனைப் போட்டு கிளறி இறக்கி விடவும். குறிப்பு
 * இந்த மீன் குழம்பு ருசியாக இருக்கும். இதற்கு வெல்லம் தேவையில்லை.

No comments:

Post a Comment