பயத்தம்பருப்பு - 200 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
நெய் - 100 மில்லி,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை:
பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும். சர்க்கரையும் தனியாக அரைத்து சலிக்கவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து, உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: பயத்தம்பருப்பு குளுமை உடையது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும்.
No comments:
Post a Comment