தேவையான பொருட்கள்:
வெள்ளை காராமணி 150 கிராம்
பெங்களூரு தக்காளி, பெரிய வெங்காயம் தலா 1
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை : பெங்களூரு தக்காளி, பெரிய வெங்காயம் தலா 1
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு.
வெள்ளை காராமணியை இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்கவும். பிறகு, சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி விடவும். இதனுடன், தக்காளி, வெங்காயம், உப்பு சேர்த்து, மிக்சியில் அரைக்கவும். பிறகு, இதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்துப் பிசைந்து, வடைகளாக தட்டி, வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு, வேக வைத்து எடுத்தால், தக்காளி சுவையுடன் காராமணி வடை தயார். தக்காளி சேர்ப்பதால் வடையை சிம்மில் வைத்து தான் பொரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் தீய்ந்துவிடும். தக்காளி, மிளகாய்த் தூள் சேர்ப்பதால், தொட்டுக் கொள்ள சட்னி தேவையில்லை.
No comments:
Post a Comment