Monday, August 12, 2013

முந்திரி குருமா



தேவையானவை: 


பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்,
 முந்திரி, தக்காளி விழுது - தலா 2 கப்,
வெங்காயம் - 2, 
புளிக்காத தயிர், 

எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். 
அரைத்துக் கொள்ள:
 இஞ்சி - ஒரு துண்டு,
 பூண்டு - 4 பல்,
 பச்சைமிளகாய் - 2, மிளகாய்த்தூள்,
 சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், 
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1
.தனியாக அரைக்க: 
முந்திரி - 8,
 தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை:
 காய்கறிகளில் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய், நெய்யைக் கலந்து காய வைத்து அதில், முந்திரியை வறுத்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை பச்சை வாடை போக வதக்கி, தக்காளி விழுது சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். தயிரைக் கடைந்து அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, அரைத்த தேங்காய் - முந்திரி விழுது, உப்பு சேர்த்து, தேவையெனில் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment