தேவையானவை: கத்திரிக்காய் (விதையில்லாதது) - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் - ஒன்று, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, லவங்கம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சின்ன கோலிகுண்டு அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, கசகசா - 4 டீஸ்பூன், முந்திரி - 3, வெந்தயம் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை, எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்யவும். கத்திரிக்காயை ஓரங்குல சதுரத்துண்டுகளாக அரிந்து கொள்ளவும். தேங்காயைத் துருவி, சிறிது நீர் விட்டு அரைத்து 3 முறை பால் எடுத்து, மூன்றையும் தனித்தனியே வைக்கவும். புளியை நன்கு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயத்துள், லவங்கம் தாளித்து... கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்க்கவும். பிறகு வறுத்துப் பொடித்த மசாலாப்பொடி, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும். நன்கு கொதிக்கும் இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்க்கவும். கிரேவி சற்று கெட்டியானதும் முதல் முறை எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி நன்கு கிளறி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கி, பரிமாறவும்.
No comments:
Post a Comment